News April 2, 2024
IPL: மும்பை அணியின் மோசமான சாதனைகள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான 14ஆவது ஐபிஎல் போட்டியில், மும்பை அணி தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் உள்ளது. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்களை குவித்த அணியும் மும்பை தான். எதிரணியை அதிக ரன்கள் குவிக்க வைத்ததும் மும்பை தான். தொடர் தோல்விகள் மற்றும் மோசமான சாதனைகளால், மும்பை ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Similar News
News January 23, 2026
TOSS: இந்திய அணி பவுலிங்

ராய்ப்பூரில் நடைபெறும் நியூசி.,க்கு எதிரான 2-வது டி20-யில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவும், குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளனர். கடந்த டி20 போட்டியில் 48 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதே உத்வேகத்துடன் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த இந்தியா தயாராக உள்ளது.
News January 23, 2026
இங்கு பள்ளிகளுக்கு 2 நாள்களே விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் நவ.24-ல் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் தொடர்ந்து 3 நாள்களும் (ஜன.24,25,26), தென்காசி மாவட்டத்திற்கு 2 நாள்களுக்கு மட்டும் (ஜன.25,26)விடுமுறை வருகிறது. இதனால், <<18933777>>திருச்சியை <<>>போல் தென்காசிக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News January 23, 2026
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று மாலை ரூபாய் மதிப்பு 54 பைசா சரிந்து ₹91.95-ஆக உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


