News April 11, 2024
IPL: மும்பை அணி பவுலிங்

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RCB பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் MI 8ஆவது இடத்திலும், RCB 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News January 16, 2026
ராணிப்பேட்டை: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! NABARD வங்கியில் காலியாக உள்ள 162 ‘Development Assistant’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். ஜன.17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். <
News January 16, 2026
மாடுகளுக்கு பொங்கல் ஓவரா கொடுக்காதீங்க.. டேஞ்சர்!

பசு மாட்டிற்கு பொங்கல், அரிசி போன்றவற்றை குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்க வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை, எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளால், மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவது, நரம்பு மண்டல பாதிப்பு, வயிறு உப்புசம் உள்ளிட்டவை ஏற்படுவதால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக என எச்சரிக்கின்றனர். பொங்கல், அரிசி போன்றவற்றை மாடுகளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டுமே வேண்டுமாம்.
News January 16, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


