News April 28, 2024
IPL: ஆட்டநாயகன் விருது வென்ற மெக்கர்க்

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெக்கர்க் ஆட்டநாயகன் வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six என விளாசி வாண வேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இதுவரை 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், 55, 20, 65, 23, 84 ரன்கள் குவித்து டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
Similar News
News February 5, 2026
தவெகவில் இருந்து முக்கியப்புள்ளி விலகலா?

விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் ஜான் ஆரோக்கியசாமி. இந்நிலையில், ஆதவ்வின் என்ட்ரிக்கு பிறகு தான் புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் ஜான் விஜய்யுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். கட்சியின் 3-ம் ஆண்டுவிழாவில் விஜய் கொடுத்த விருந்திலும் ஜான் பங்கேற்கவில்லையாம். மேலும் விஜய்யின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள ஜான், விரைவில் தவெகவில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளாராம்.
News February 5, 2026
ஏன் மூன்று முறை ஆரத்தி காட்டுகிறோம் என தெரியுமா?

பொதுவாக கடவுளை வழிபடும் போது, 3 முறை கற்பூர ஆரத்தி காட்டுவோம். அது, கடவுளின் 3 நிலைகளை குறிக்கிறது. அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது 3 காலங்களான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையும் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது. SHARE IT.
News February 5, 2026
அதிமுகவில் புதிய கட்சி.. செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி

கொங்கு மக்கள் முன்னணி(கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் C.ஆறுமுகம், EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் முன்னணி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொமமுவுடன் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அக்கட்சி திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.


