News April 2, 2025

தியேட்டரில் IPL போட்டிகள்?

image

நடப்பு ஐபிஎல் தொடரை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கேட்டிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி உண்டு. கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை ஒளிபரப்பினால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். உங்களுக்கு தியேட்டரில் IPL பார்க்க விருப்பமா?

Similar News

News November 24, 2025

தருமபுரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தருமபுரியில் இலவச அழகு கலை பயிற்சி,செவிலியர் உதவியாளர் மற்றும் மருந்தக உதவியாளர் ஆகிய பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே 18 – 40 வயது கொண்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த இருவரும் இப்ப பயிற்சியில் சேர்ந்து பயனடைய அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு 04342232288 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 24, 2025

இன்று புதிய தலைமை நீதிபதி பதவியேற்கிறார்

image

இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக (CJI) சூர்யகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் பூடான், கென்யா, மலேசியா, மொரிசியஸ், இலங்கை, நேபாள் தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர். CJI பதவியேற்பு விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஹரியானாவிலிருந்து பதவியேற்கும் முதல் CJI சூர்யகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

image

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!