News April 16, 2024
IPL: பல கோடி கொடுத்தும் பலனில்லை

நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பெங்களூரு வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளதாக RCB ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கேமரூன் க்ரீன் (₹17.50 கோடி), அல்ஸாரி ஜோசப் (₹11.50 கோடி), மேக்ஸ்வெல் (₹11 கோடி) ஆகிய வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. அதேபோல், இந்திய அணியின் சிறந்த பவுலரான சிராஜும் (₹7 கோடி) விக்கெட் எடுப்பதில் தடுமாறுவதால், பந்துவீச்சில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது.
Similar News
News March 26, 2026
IPL: ஸ்டம்பிங் கில்லாடி தோனி

பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு ஒரு இன்ச் நகர்ந்தால் கூட மின்னல் வேகத்தில் அவுட் செய்யும் தோனியே IPL-ன் ஸ்டம்பிங் கில்லாடி. அதிக ஸ்டம்பிங் செய்த WK பட்டியலில் தோனி(47) முதலிடத்தில் இருப்பதுடன், Fastest Stumping ((0.12 விநாடி) சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். அடுத்த இடங்களில் DK(37), உத்தப்பா(32), சஹா(26), பண்ட்(24), சாம்சன்(17), டி காக்(16), பார்த்திவ் படேல்(16), கில்கிறிஸ்ட்(16) இருக்கின்றனர்.
News March 26, 2026
விஜய்க்கு பச்சைக்கொடி காட்டிய ECI

சென்னையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள ECI அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 28-ல் பெரம்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இருந்து தனது பரப்புரை பயணத்தை தொடங்குகிறார். பெரம்பூரில் விஜய் போட்டியிடப்போவதாக தொடர்ந்து செய்திகள் வரும் நிலையில், அவருடைய பரப்புரை பயணம் அதை கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. மேலும், தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
News March 26, 2026
இனி இவர்களுக்கு ரயில் பயணம் ஃப்ரீ..

சேனா, நௌசேனா, வாயுசேனா விருதுகளை பெற்ற ராணுவ வீரர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த வீரர்களின் துணைவர் (மறுமணம் வரை) அல்லது திருமணம் ஆகாத நிலையில் உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. First Class, 2AC, AC Chair Car வகுப்புகளில் தேவையானதை தேர்வு செய்து அவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.


