News April 4, 2025

ஐபிஎல்: லக்னோ அணி முதலில் பேட்டிங்…!

image

ஹர்திக் பாண்டியாவின் MI, ரிஷப் பண்ட்டின் LSG ஆகிய அணிகள் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளன. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன. 2-வது வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். நேருக்குநேர் மோதிய 6 போட்டிகளில் LSG 5 முறையும், MI 1 முறையும் வென்றுள்ளன. இன்று வெல்லப் போவது யார்?

Similar News

News April 12, 2025

சோகத்தில் வாடிப்போன கோலி

image

சொந்த மண்ணில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது RCB வீரர்களை ரொம்ப அப்செட் ஆக்கிவிட்டது. குறிப்பாக டிரெஸ்ஸில் ரூமில் அமர்ந்திருந்த விராட் கோலியின் முகத்தை பாருங்கள். சோகத்தை வெளிப்படுத்தும் இந்த போட்டோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரல். நேற்று நடந்த மேட்சில், தன் அதிரடியால் K.L.ராகுல் வெற்றியை பறித்துவிட்டார் என்று சொல்லலாம். நீங்கள் அந்த போட்டியை பார்த்தீர்களா? எப்படி இருந்தது?

News April 12, 2025

திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்

image

திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அப்துல் ரசாக் மாெல்லா (90) பிரெய்ன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு காலமானார். கடந்த 1972-2021 வரை MLA-வாக இருந்துள்ளார். மே.வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் இடதுசாரி அரசு ஆட்சியில் நிலம், நில சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்தார். சிங்கூர் நில விவகாரத்தில் புத்ததேவ் அரசை விமர்சித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திரிணாமூலில் சேர்ந்தார்.

News April 11, 2025

‘ரெட்ரோ’ ஃபீவர்: VIBE பண்ண ரெடியாகுங்க மக்களே..

image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் 3வது சிங்கிளான ‘The One’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக 2ஆவது பாடலான ‘கணிமா’ பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. வரும் மே 1ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளதால், இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

error: Content is protected !!