News May 3, 2024
IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, KKR அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், MI 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால், MI வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News February 7, 2026
உலக புற்றுநோய் தினம் தினத்தை முன்னிட்டு பேரணி!

இன்று (பிப்.07) விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்
ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில் குமார் உட்பட பலர் உள்ளனர்.
News February 7, 2026
நகைக் கடன்.. RBI முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் 2025 டிசம்பர் நிலவரப்படி, நகைக் கடன்களின் அளவு ₹3.82 டிரில்லியனாக அதிகரித்திருப்பதாக RBI கவர்னர் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடன் நிலுவை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்க ஏதுவாக, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் RBI முன் அனுமதியை பெறுவதில் இருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
News February 7, 2026
பும்ராவுக்கு வைரஸ் காய்ச்சல்… முதல் மேட்ச்சில் ஆப்சென்டா?

டி20 உலக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று இரவு அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாம். இதனால் சிராஜ் இன்றைய போட்டியில் களம் காண்பார் என கூறப்படுகிறது.


