News April 23, 2025
IPL: கே.எல். ராகுல் படைத்த தரமான சாதனை..!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னரின் சாதனை டெல்லி வீரர் கே.எல். ராகுல் தவிடுபொடியாக்கியுள்ளார். 130 இன்னிங்சில் விளையாடிய அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, டேவிட் வார்னர் (135), விராட் கோலி (157), ஏபி டிவில்லியர்ஸ் (161), ஷிகர் தவான் (168) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள்?
Similar News
News April 23, 2025
மஞ்சள் கலரில் சிறுநீர் வருகிறதா?

வெயில் காலங்களில் குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும். மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், நீரிழப்பை குறிக்கலாம். எனவே, தாகம் எடுக்காவிடிலும் கூட, போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். ORS, வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களை பருகி நீரிழப்பை தவிர்க்கவும். வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும்.
News April 23, 2025
1 சவரன் தங்கம் ரூ.1 லட்சம்.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் சேர்த்து ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
News April 23, 2025
திருமணம் இப்படித்தான் இருக்கணும்.. மனம் திறந்த சிம்பு

தக் லைஃப் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார். அதில், ‘திருமணம் பிரச்னை இல்லை, மக்கள்தான் பிரச்னை. விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை குறைந்துவிட்டது. நீ இல்லையென்றால் வேறொருவர் என்ற மனநிலை அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன். அப்படி இருக்க கூடாது. சரியான நேரம் வரும்போது திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.