News April 21, 2025
IPL: KKR அணிக்கு 199 ரன்கள் இலக்கு

இன்றைய ஐபிஎல் போட்டியில், KKR அணிக்கு எதிராக 198/3 ரன்களை குவித்திருக்கிறது GT அணி. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் நிலையாக விளையாடி, முறையே 52 & 90 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய பட்லரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். KKR அணியின் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Similar News
News November 5, 2025
சற்றுமுன்: விஜய் பாதுகாப்பு வாகனம் விபத்து

பொதுக்குழுவில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு விஜய் வருகை தந்தபோது, பவுன்சர்கள் சென்ற வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை; கார் மட்டும் சேதமடைந்துள்ளது. கரூர் பரப்புரைக்கு சென்றபோதும், விஜய்யின் பவுன்சர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 5, 2025
மனிதர்கள் தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை

பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.


