News April 29, 2025
IPL: KKR முதலில் பேட்டிங்

டெல்லியில் நடைபெறவிருக்கும் இன்றைய IPL போட்டியில், DC – KKR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார் DC கேப்டன் அக்சர் படேல். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் DC 4-வது இடத்திலும், KKR 7-வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் DC அணி முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Similar News
News November 15, 2025
பிஹார் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு: வேல்முருகன்

உண்மையான பிஹார் மக்கள் ஓட்டுப்போட்டா பாஜகவினர் வெற்றி பெற்றார்கள் என தவாக வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்ற அவர், இதையே TN-லும் செய்ய பாஜக திட்டமிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், TN-ல் உள்ள வட இந்தியர்களுக்கு Voter ID கொடுத்ததன் மூலம், பகுத்தறிவாளிகள் வெல்ல முடியாத சூழல் உருவாகும் எனவும் கூறினார்.
News November 15, 2025
ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
BREAKING: சிஎஸ்கே அணியில் புதிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சன் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாள்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இந்த சஸ்பென்ஸுக்கு தற்போது கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலளித்துள்ளது. X தளத்தில், ‘Time ആയി’ (‘time has come’) என பதிவிட்டு சாம்சன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. CSK-வில் சஞ்சு ஜொலிப்பாரா?


