News April 12, 2025
IPL: வெளியேறிய முக்கிய வீரர்!

நடப்பு IPL தொடரில் இருந்து, க்ளென் பிலிப்ஸ் காயம் காரணமாக விலகியிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. GT அணிக்காக விளையாடி வரும் இவர், SRH அணிக்கு எதிரான மேட்ச்சின் போது, இடுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பிலிப்ஸ் நியூசிலாந்து புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று GT அணி, LSG அணியை எதிர்கொள்ள உள்ளது.
Similar News
News December 18, 2025
பனித்துளி பூவே ப்ரீத்தி அஸ்ராணி

‘அயோத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ப்ரீத்தி அஸ்ராணி, தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், பனித்துளிகளில் மலர்ந்த பூவாக மின்னுகிறார். அவரது, நீளமான இமைக்கீழ் ஒளிந்திருக்கும் பார்வை, சொல்லாத கதை சொல்லுகிறது. அவரது போஸ், கவிதை பேசும் கண்கள் கொண்ட உயிருள்ள ஓவியம் போன்று இருக்கிறது. இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 18, 2025
உலகக் கோப்பை நாயகிகளை நேரில் வாழ்த்திய சச்சின்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் WC-ஐ வென்ற இந்திய மகளிர் அணியை சச்சின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், பலருக்கு பார்வை இருந்தாலும், சிலருக்கே தொலைநோக்கு பார்வை இருப்பதாக பதிவிட்டுள்ளார். உலக அரங்கில் இந்தியாவை பெருமையடைய செய்துள்ள இந்த வீராங்கனைகள், அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக திகழ்வதாகவும் பாராட்டியுள்ளார்.
News December 18, 2025
நேரத்தை மிச்சம் செய்யும் shortcuts

கம்ப்யூட்டரில் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பணிகளை எளிதாகவும் வேகமாகவும் முடிக்க உதவுகின்றன. அன்றாட பணிகளில் கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பயன்படுத்துவது, குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்பட உதவுகிறது. உங்கள் நேரத்தை சேமித்து, பணியை எளிதாக்கும் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


