News March 17, 2024
ஐபிஎல் ஒரு சர்க்கஸ் போன்றது

ஐபிஎல் போட்டிகள் சர்க்கஸ் போல் மகிழ்விக்கும் என்று ஆஸி.யின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது புதிய சவாலாக உள்ளதாக கூறிய அவர், இந்த போட்டி உலகின் சிறந்த டி20 லீக் ஆகும் என்று தெரிவித்தார். 2014, 2015 சீசன்களில் ஆர்சிபிக்காக விளையாடிய ஸ்டார்க், தற்போது கொல்கத்தா அணி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
Similar News
News October 20, 2025
நாளை மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
MLA தேர்தலில் போட்டியிடும் வயது குறைகிறது

தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது 25-ல் இருந்து 21 ஆக குறைக்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசியலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
News October 19, 2025
தீபாவளிக்கு எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுவது?

தீபாவளி அன்று நிறைய விளக்குகளை ஏற்றி, அவற்றின் ஒளி மூலம் இறைவனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதன்படி எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரியுமா? பசு நெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் சேரும், நல்லெண்ணெய் பயன்படுத்தினால் எல்லா வித பீடைகளும் விலகும், விளக்கு எண்ணெய் பயன்படுத்தினால் தாம்பத்ய சுகம் கிடைக்குமாம். இதில் குறிப்பாக கடலை எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது.