News March 28, 2024

IPL: தக்க பதிலடி கொடுத்த சர்வதேச வீரர்கள்

image

மும்பை வீரர் மஃபாகாவுக்கு, சர்வதேச வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தென் ஆப்., வீரரான மஃபாகா (17), சமீபத்தில் நடந்த U19 உலகக் கோப்பைத் தொடரில், “பும்ரா நீங்கள் நல்ல பவுலர். ஆனால், நான் உங்களைவிட சிறந்தவன்” எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய ஐபிஎல் போட்டியில் மஃபாகாவின் பந்துவீச்சை சிதறடித்து, சர்வதேச போட்டிகள் கடுமையானவை என முன்னணி வீரர்கள் புரிய வைத்துள்ளனர்.

Similar News

News December 6, 2025

சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.77 லட்சம் பேர் பலி

image

நாடு முழுவதும் 2024-ல் மட்டும் சாலை விபத்துகளால் 1.77 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக பார்லிமெண்டில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம். அதேநேரத்தில், சாலை போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மதித்து, விலை மதிப்பற்ற உயிர்களை காப்போம்!

News December 6, 2025

ஒரே வாரத்தில் 100 டன் வெள்ளி விற்பனை!

image

வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீட்டில் இருக்கும் பழைய வெள்ளி பொருள்களை விற்று வருகின்றனர். IBJA தரவுகளின் படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 டன் வெள்ளி விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு மாதத்திற்கு 10-15 டன் தான் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹1.90 லட்சத்தை தொட்டதால், இந்த சூழலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

News December 6, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்.. பவன் கல்யாண் காட்டம்

image

ஹிந்துக்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றக் கூட, நீதிமன்றத்தை நாட வேண்டி இருப்பதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பவன் கல்யாண் வேதனை தெரிவித்துள்ளார். ஹிந்து மரபுகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. பிற மத நிகழ்வுகளை அவர்களால் கேலி செய்ய முடியுமா? சாதி, மொழி பிரிவினைகளை கடந்து ஹிந்துக்கள் ஒன்றிணையும் வரையில், இந்த அவலம் தொடரும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!