News April 20, 2024
IPL: 15 பந்துகளில் அரை சதம்

SRHக்கு எதிரான போட்டியில் DC வீரர் மெர்குர்க் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வால் (13 பந்து) உள்ளார். KL ராகுல், கம்மின்ஸ் 14 பந்துகளில் அடித்துள்ளனர். யூசுப் பதான், பூரண், நரைன் 15 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர். மெர்குர்க் 65 (18) ரன்னில் ஆட்டமிழந்தார்.
Similar News
News February 1, 2026
4 ஓவரில் 58 ரன்கள்! பும்ராவின் மோசமான ரெக்கார்டு

எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் பும்ராவை, நேற்று NZ வீரர்கள் சோதித்துவிட்டனர். 5-வது T20I-ல், பும்ரா இதுவரை தனது T20I கரியரில் இல்லாத அளவிற்கு 4 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதுவே அவரின் மோசமான பந்துவீச்சாகும். அதே போல, தனது T20I கரியரில் ஒரே ஓவரில் அதிக ரன்களையும் நேற்று பும்ரா வாரிக் கொடுத்தார். ஆட்டத்தின் 14-வது ஓவரில், பும்ரா மொத்தமாக 22 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
News February 1, 2026
திமுக ஆட்சியை அகற்று முருகா: நயினார் நாகேந்திரன்

தைப்பூசைத்தையொட்டி தமிழகம் எங்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், முருகனிடம் அரசியல் ரீதியான கோரிக்கை ஒன்றை நயினார் நாகேந்திரன் வைத்துள்ளார். அதாவது, தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என முருகனிடம் அவர் வேண்டுதல் வைத்துள்ளார். மேலும் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அறிவித்த EPS நன்றி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News February 1, 2026
ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி Promise

‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கதையை பட்டை தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரஜினி பட அறிவிப்பு வந்ததும் பலர் வாழ்த்தியதாகவும், சிலர் இவன் இயக்குநரா என பயந்ததாகவும் பகிர்ந்துள்ளார். அதேநேரம், இந்த படம் முடிந்து ரசிகர்கள் வெளியே வரும்போது முழு திருப்தி கிடைக்கும், இது என் Promise என உறுதியளித்துள்ளார்..


