News April 25, 2024
ஐபிஎல் : குஜராத் அணி தோல்வி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 224/4 ரன்கள் குவித்தது. 225 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Similar News
News January 22, 2026
சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் புதிய படம்!

‘அரசன்’படத்தில் பிஸியாக உள்ள சிம்புவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். ‘அரசன்’ படம் முடிந்த கையோடு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடம் ‘அரசன்’ அடுத்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் 2 முக்கியமான படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
News January 22, 2026
NDA வெற்றிக் கூட்டணியாக மாறி வருகிறது: வானதி

தமிழகத்திற்கு PM மோடி வருகிறபோது கூடுகின்ற கூட்டம் என்பது TN-ன் ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுவதாக இருக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் CM வேட்பாளரான EPS வீட்டில் இன்று நடந்த காலை விருந்தில் அவர் பங்கேற்றார். அப்போது, ஒவ்வொரு நாளும் NDA கூட்டணிக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது என்றும், TN-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் வானதி தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், ஆட்சியில் உள்ள திமுக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியிட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.


