News May 26, 2024

IPL FINAL: ஹைதராபாத் அணி பேட்டிங்

image

கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். குவாலிஃபயர் 2 சுற்றில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால், இன்றைய போட்டியிலும் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்துள்ளார்.

Similar News

News March 11, 2026

இப்படி விளக்கேற்றுங்கள்.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

image

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில், பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரித்து செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது.

News March 11, 2026

உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(11.03.2026) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 118(₹10,844) உயர்ந்து $5,214 ஆக மாறியுள்ளது. மேலும், வெள்ளி 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $88-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையில் <<19342889>>நேற்று சவரனுக்கு ₹800<<>> உயர்ந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.

News March 11, 2026

உடனே நடவடிக்கை: ஐகோர்ட் வார்னிங்

image

தமிழகத்தில் அரசு உத்தரவுக்கு விரோதமாக ஆர்டர்லி நடைமுறை பின்பற்றுவதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், இதை அமல்படுத்தவில்லை என்றால் அதிகாரிகள் மீது பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!