News March 22, 2025
ஐபிஎல் திருவிழா: டூடுலை மாற்றிய கூகுள்!

ஐபிஎல் ஃபீவர் கூகுளையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறது. இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இரு வாத்துகள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் KKR, RCB அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த அணிகள் இடையே நடந்த 34 போட்டிகளில் KKR 20, RCB 14 போட்டிகளில் ஜெயித்துள்ளன. இன்றைய மேட்ச்சில் யார் ஜெயிப்பார்கள்?
Similar News
News March 23, 2025
இன்றைய (மார்ச் 23) நல்ல நேரம்

▶மார்ச் – 23 ▶பங்குனி – 09 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM- 04:30 AM ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 23, 2025
பேச்சுவார்த்தையில் செங்கோட்டையன் சமாதானம்

இபிஎஸ்சை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவருடன் அதிமுகவின் மூத்தத் தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செங்கோட்டையன் சமாதானம் ஆனதாகக் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய அதிமுக நிர்வாகிகள், இபிஎஸ்- செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு இல்லை, 2026 தேர்தலே அதிமுக இலக்கு எனக் கூறியுள்ளனர்.
News March 23, 2025
மும்பை அணி கோப்பை வெல்லும்: மைக்கேல் வாகன்

2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என்றும், சுப்மன் கில் அதிக ரன் அடித்த வீரராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? கமெண்ட் பண்ணுங்க…