News April 5, 2025
IPL: இன்று டபுள் டமாக்கா!

இன்று 2 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதுகின்றன. ருதுராஜ் இல்லாததால் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் எனத் தகவல். தொடர் தோல்விகளில் இருந்து சென்னை மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Similar News
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
News December 3, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News December 3, 2025
40 சீட்டை டிமாண்ட் செய்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் சீட் ஷேரிங் குழு இன்று பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இக்குழு 2026 தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18-ல் வெற்றிப்பெற்றது. ஆனால் இம்முறை அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால், காங்., கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


