News April 27, 2025
IPL: இன்று டபுள் டமாக்கா..

IPL-ல் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30-க்கு தொடங்கும் முதல் போட்டியில் MI vs LSG மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 9 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் LSG 6-வது இடத்திலும், MI 5-வது இடத்திலும் உள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் RCB vs DC அணிகள் மோத உள்ளன. 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் DC 2-ம் இடத்திலும், 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் RCB 3-ம் இடத்திலும் உள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

2-வது ODI-ல் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(110) சதம் அடித்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து பிரீட்ஷி(68) மற்றும் டிவால்ட் பிரேவிஸ்(54) அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் SA வெற்றியை தனதாக்கியது. இருவர் சதம் அடித்தும் பந்து வீச்சு எடுபடாததால் இந்தியா தோல்வியை தழுவியது.
News December 3, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.
News December 3, 2025
சிகரெட் விலை உயர்கிறது

புகையிலை & புகையிலை சார்ந்த பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கும்பொருட்டு, மத்திய கலால் வரி திருத்த மசோதா 2025, லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சிகரெட்களின் விலை, அதன் நீளம், வகையை பொறுத்து 1,000 சிகரெட்களுக்கு ₹2,700 – ₹11,000 வரை உயர்கிறது. இதனால் சிகரெட்டுகளின் விலை ₹2 வரை உயரலாம் என கூறப்படுகிறது. மெல்லும் புகையிலை பொருள்களான பான் மசாலா உள்ளிட்டவை கிலோவுக்கு ₹100 உயர்கிறது.


