News May 26, 2024

IPL: வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

image

KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு, இந்திய மதிப்பின்படி ₹20 கோடி, தோல்வியடையும் அணிக்கு ₹13 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, தொடரில் 3ஆவதாக இடம்பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ₹7 கோடியும், 4ஆவதாக இடம்பிடித்த பெங்களூரு அணிக்கு ₹6.5 கோடியும் வழங்கப்படும். இம்முறை கோப்பையை வெல்லப் போவது யார்?

Similar News

News April 4, 2026

வாஷிங்டன் மேயர் போட்டியில் தேனி தமிழச்சி

image

தேனியை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு இவரது குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இதில் போட்டியிடுவதற்கு 4,500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று விண்ணப்பம் செய்துள்ளார். இது, தேவையான எண்ணிக்கையை விட அதிகமாம். வாழ்த்துகள்!

என்.ஆர்.காங்கிரஸை முதல் முறையாக விமர்சித்த விஜய்

image

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது, காங்., – திமுக, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சித்தார். என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சிப்பது இதுதான் முதல்முறையாகும். ஆண்ட, ஆளும் கட்சிகள் ஏன் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தவெக ஆட்சியில் சட்டப்படி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்

error: Content is protected !!