News March 11, 2025
IPL: டெல்லி கேப்டன்சியை ஏற்க மறுத்த ராகுல்?

ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க உள்ளது. டெல்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. KL ராகுல், அக்சர் படேல் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பு தனக்கு வேண்டாம் என அணி நிர்வாகத்திடம் KL ராகுல் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது அக்சர் படேல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News July 9, 2025
4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.
News July 9, 2025
செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
News July 9, 2025
ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்பு!

4G, 5G ஸ்மார்ட் போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. One Plus, iQOO, Leomi, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு செல்போன்கள் தேங்கியுள்ளன. ரக்ஷா பந்தன், சுதந்திர தினம் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் பண்டிகைகளுக்கு முன்பே கையிருப்பில் உள்ள செல்போன்களை சலுகையில் விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் பட்ஜெட் என்ன?