News March 29, 2025
IPL: தோனி படைத்த சாதனை

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதுவரை 236 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 4,699 ரன்களை எடுத்து, சுரேஷ் ரெய்னாவின் (176 போட்டிகளில் 4687 ரன்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில், 2,721 ரன்களுடன் டூப்ளஸிஸ் 3ஆம் இடத்திலும், 2,433 ரன்களுடன் ருதுராஜ் 4ஆம் இடத்திலும், 1,932 ரன்களுடன் அம்பத்தி ராயுடு 5ஆம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 31, 2025
யார் இந்த நிதி திவாரி?

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக (personal secretary) நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். 2014 பேட்ச் IFS அதிகாரியான இவர், வாரணாசியை சேர்ந்தவர். 2023 முதல் பிரதமர் அலுவலகத்தில் Dy.secretary-யாக உள்ள இவர், வெளியுறவு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அரசின் அயலுறவுக் கொள்கையில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த அரசு நிர்வாக தொடரும் வரை (அ) அடுத்த அறிவிப்பு வரை, இவர் புதிய பதவியில் தொடருவார்.
News March 31, 2025
அசராமல் உயரும் தங்கம்… ஒரே நாளில் 2 முறை அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.520 அதிகரித்த நிலையில், மாலையில் ரூ.200 உயர்ந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் தங்கம், கிராம் ரூ.8,450 ஆகவும், சவரன் ரூ.67,600 ஆகவும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை குறைய என்ன செய்யலாம்?
News March 31, 2025
மாஸ் காட்டிய மும்பை… மளமளவென சரிந்த விக்கெட்!

வான்கடே மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணி அபாரமாக விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணியில், டி காக்(1), நரேன்(0), ரஹானே(11), வெங்கடேஷ் ஐயர்(3) உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கொல்கத்தா அணி 7 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.