News March 31, 2024
IPL: தோனி புதிய சாதனை

சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவந்த டெல்லி வீரர் ப்ரித்வி ஷாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய தோனி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை (300) ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்ரான் அக்மல் 274, தினேஷ் கார்த்திக் 274, டிகாக் 270, பட்லர் 209 அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனியின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
சொந்த நாடு திரும்ப ஆசைப்படும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
News October 30, 2025
ரயில்வே வேலை வேணுமா? 5,810 Vacancies; முந்துங்க

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <
News October 30, 2025
ஒதுக்கிய ரஜினி – கமல்.. தெலுங்கு பக்கம் சென்ற லோகி!

ரஜினி – கமல் இணையும் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள லோகேஷ் அடுத்து ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். அதே நேரத்தில், ரஜினி- கமலுக்காக எழுதிய ஸ்கிரிப்டை வீணடிக்க வேண்டாம் என KVN தயாரிப்பு நிர்வாகத்திடம் அந்த கதையை லோகேஷ் கூற, அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். தற்போது, இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரபாஸை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறதாம்.


