News April 8, 2024
IPL: டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் மாற்றம்

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரி புரூக், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க வீரர் லிசாட் வில்லியம்ஸ், அணியில் இணைந்துள்ளார். 2021இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வில்லியம்ஸ், இதுவரை 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக ஐபிஎல்லில் களமிறக்கும் இவர், தனது கால் தடத்தை பதிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar News
News March 16, 2026
இனி சிலிண்டருக்கும் பூட்டு போடனும்!

தங்கத்தை பாதுகாப்பது போல் கேஸ் சிலிண்டரை பாதுகாக்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. ஆமாங்க, மத்திய பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணை தாக்கிவிட்டு கேஸ் சிலிண்டரை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிலிண்டரை ஜெயின் போட்டு பூட்டி வைத்துள்ளனர். உங்க வீட்டு சிலிண்டர் பத்திரமா இருக்கா?
News March 16, 2026
டான்ஸிங் ஏவுகணையை பயன்படுத்திய ஈரான்

ஈரான் இந்த போரில் முதல்முறையாக சக்திவாய்ந்த செஜ்ஜில் என்ற ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. ஏவுகணைகளை தடுத்து அளிக்கும் அயன் டோமை தாண்டி இலக்குகளை தாக்கு திறன் கொண்ட இதற்கு, டான்ஸிங் ஏவுகணை என்ற பெயரும் உள்ளது. 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கு திறன் கொண்ட டான்ஸிங் ஏவுகணை, ஈரானின் முக்கியமான துருப்பு சீட்டாகவும் பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 634
▶குறள்:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
▶பொருள்: ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.


