News April 29, 2024
IPL: 5 கேட்சுகளை பிடித்த டேரில் மிட்செல்

SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் டேரில் மிட்செல் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, க்ளாஸன், ஷாபாஸ் அகமது, கம்மின்ஸ் ஆகிய 5 பேரின் கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற முகமது நபியின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 5 கேட்சுகளை பிடித்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
நாமக்கல்: மானியத்துடன் ₹3.50 லட்சம் கடன் வேண்டுமா? CLICK NOW

நாமக்கல் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 27, 2026
வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது அல்ல: எலான் மஸ்க்

உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை ரகசியமாக யாராவது படித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது உண்மை தான் என்கிறார் எலான் மஸ்க். வாஸ்ட்ஆப் உரையாடல்களை மெட்டா நிறுவனம் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மெட்டா, என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் மெசேஜ்கள் பாதுகாப்பானவை என வாதிட்டது. இதுபற்றி கமெண்ட் செய்த மஸ்க், வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்றது என்று கூறியுள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 27, 2026
தவெக கூட்டணியில் ராமதாஸ்?

NDA கூட்டணியில் அப்பாவை இணைக்கக் கூடாது என அன்புமணி நிபந்தனை வைத்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக் கூடாது என்று விசிக முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாள்களில் செங்கோட்டையன் மூலம் ராமதாஸை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு பலம் சேர்க்குமா?


