News March 28, 2025
IPL: CSK அணி முதலில் பந்துவீச்சு…!

சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான CSK அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான RCB அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகின்றன. இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், CSK 21 முறை, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
Similar News
News March 31, 2025
கள்ளநோட்டு விவகாரம்: விசிக நிர்வாகி செல்வம் நீக்கம்

கள்ளநோட்டு விவகாரத்தில் சிக்கிய விசிகவின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பரம.செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தில் செல்வத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ₹85,000 கள்ளநோட்டுகள், பிரிண்டிங் மெஷின், பணம் எண்ணும் இயந்திரங்கள், போலீஸ் சீருடைகள், பிஸ்டல் ஏர்கன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
₹800 பீஸ்-காக பறிபோன பள்ளி மாணவியின் உயிர்!

உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டத்தில் ₹800 செலுத்தாததால் 9 ஆம் வகுப்பு மாணவியை, பள்ளி நிர்வாகம் ஒரு தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. இதனால், மனமுடைந்து போன அம்மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது, தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகியோர் தனது மகளை அவமானப்படுத்தியதாக தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மனதில் கொள்ளுங்கள் மரணம் எதற்கும் முடிவல்ல!
News March 31, 2025
RR கேப்டன் பராக்குக்கு சிக்கல்…

RR அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றாலும் நேற்றை ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை என்பதால் கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ₹12 லட்சத்தை அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது. ஏற்கெனவே மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு இதே போல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.