News March 12, 2025
IPL: சிஎஸ்கே அணி போட்டி டிக்கெட் விலை ரூ.1.23 லட்சம்

IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 205 ▶குறள்: இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. ▶பொருள்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
News March 13, 2025
ரூ.4,386 கோடி மோசடி தடுப்பு: மத்திய அரசு

ரூ.4,386 கோடி மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் தாக்கல் செய்துள்ள பதிலில், மோசடி குறித்து தொலைபேசி மூலம் 13.36 லட்சம் புகார்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7.81 லட்சம் சிம்கார்டுகளின் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!