News April 24, 2024

IPL: 210 ரன்கள் குவித்தது CSK

image

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் அடித்தனர். வழக்கம்போல அதிரடியாக ஆடிய துபே இன்று 7 சிக்ஸர்கள் விளாசினார். இதையடுத்து LGS அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. LSG சார்பில் ஹென்றி, மோசின் கான், யஷ் தாகூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Similar News

News January 7, 2026

வீட்டுக்கு ஒரு விஜய்: JCD பிரபாகர்

image

மக்களை காப்பாற்றக்கூடிய கரம் விஜய்யிடம் இருக்கிறது என JCD பிரபாகர் கூறியுள்ளார். 1972-ல் MGR தொடங்கிய அதிமுக 1973-ல் இடைத்தேர்தலில் வென்றதை மேற்கோள்காட்டிய அவர், அதேபோல தவெகவும் தேர்தலில் வெல்லும் என்றார். மேலும், மக்கள் மனதில் நிரந்தரமாக இடம்பெறக்கூடிய தலைவராக விஜய் இருக்கிறார் என்றும், இன்று வீட்டுக்கு ஒரு விஜய் உருவாகிவிட்டார் எனவும் பேசியுள்ளார். உங்கள் வீட்டில் ஒரு விஜய் இருக்கிறாரா?

News January 7, 2026

உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

image

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.

News January 7, 2026

BREAKING: தங்கம், வெள்ளி விலை.. புதிய உச்சம்

image

தங்கத்திற்கு ஈடாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.7) ஒரு கிராம் வெள்ளி ₹12 உயர்ந்து ₹283-க்கும், பார் வெள்ளி ₹12,000 உயர்ந்து ₹2,83,000-க்கும் விற்பனையாகிறது. இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால், மிக விரைவில் 1 கிராம் வெள்ளி ₹300-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!