News May 7, 2025
IPL: CSK முதலில் பேட்டிங்

சென்னையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில், CSK – PBKS அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸை வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றிகளை பெற CSK முயற்சித்து வருகிறது.
Similar News
News December 4, 2025
புதிய பாஜக தேசிய தலைவர் இளைஞரா?

பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2023-ல் முடிந்த நிலையில், தற்போதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று பார்லி.,யில் உள்ள தனது அறையில் அமித்ஷா உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை செய்தார். அப்போது, பாஜக புதிய தலைவர் முதல் மத்திய அமைச்சரவை மாற்றம் வரை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இளைஞர் ஒருவரை கட்சி தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 4, 2025
ரைஸ் இப்படி சாப்பிட்டால் சுகர் வராது..

எப்போதும் சாதத்தை அதிகமாகவும், காய்கறிகளை குறைவாகவும் சாப்பிடுறீங்களா? இந்த தவறை செய்வதால் ரத்தத்தில் குளுக்கோஸ் லெவல் அதிகரிக்கும். எனவே சாப்பாட்டை குறைத்து, காய்கறியை அதிகமாக எடுங்கள். அத்துடன், முதலில் நார்ச்சத்து(காய்கறி), புரதம்(கறி, முட்டை, பனீர்) சாப்பிடுங்கள். கடைசியாக கார்போஹைட்ரேட்(ரைஸ்) சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. SHARE THIS.
News December 4, 2025
சற்றுமுன்: விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


