News April 25, 2025
IPL: CSK முதலில் பேட்டிங்

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் CSK vs SRH அணிகள் மோதவுள்ளன. டாஸ் வென்ற SRH கேப்டன் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் தோல்வியுறும் அணி, புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திற்கு செல்லும் என்பதால் தோல்வியை தவிர்க்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
Similar News
News April 26, 2025
CSK-வை வீழ்த்தி SRH அணி வெற்றி

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CSK-வை வீழ்த்தி SRH வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த CSK அணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால், அந்த அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எளிய இலக்குடன் களமிறங்கிய SRH அணியும் தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், கடைசி நேரத்தில் நிதிஷ், கமிந்து அதிரடி காட்ட SRH அணி வென்றது.
News April 26, 2025
ராசி பலன்கள் (26.04.2025)

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – கவலை ➤மிதுனம் – பயம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – களிப்பு ➤கன்னி – தாமதம் ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – சிக்கல் ➤மகரம் – லாபம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – சோதனை.
News April 26, 2025
நினைவுகளின் விசித்திர அனுபவம்

நினைவுகள் எப்போதும் சிறப்பானவை தான். கடந்த காலத்தில் நாம் அழுத கணங்களை நினைவுகூர்ந்து, அட இதற்கா நாம் அவ்வளவு கவலைப்பட்டோம் என்று சில சமயங்களில் நாம் சிரிக்கிறோம். அதேநேரம் நாம் சிரித்து மகிழ்ந்த காலங்களை நினைத்து, மீண்டும் அந்த காலம் வாராதா என்று ஏங்கி அழவும் செய்கிறோம். இது தானே வாழ்க்கை!