News April 28, 2024
IPL: சென்னை அணி பேட்டிங்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 5 வெற்றிகளுடன் SRH 3ஆவது இடத்திலும், 4 வெற்றிகளுடன் CSK 6ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News February 5, 2026
விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை HC நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது. 2015-ல் வெளியான ‘புலி’ படத்திற்கு பெற்ற வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை ₹1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை HC நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
News February 5, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. இறுதியாக அறிவித்தார்

<<19058035>>அகில இந்திய பார்வர்டு பிளாக்<<>> கட்சியைத் தொடர்ந்து, மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான கூட்டணியை இன்று உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடந்துள்ளது.
News February 5, 2026
ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மோடி

காங்கிரஸ் கட்சி சீக்கியர்களை அவமதிப்பதாக PM மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை ராகுல் காந்தி ‘<<19050653>>துரோகி நண்பா<<>>’ என அழைத்ததை சுட்டிக்காட்டி பேசிய மோடி, காங்கிரஸை விட்டு வெளியேறிய வேறு யாரையும் துரோகி என அழைக்காத இளவரசர் (ராகுல்), ரவ்னீத் சிங் சீக்கியர் என்பதால் அவமதித்ததாகவும், சீக்கியர் மீதான காங்கிரஸின் வெறுப்புக்கு இதுவே ஆதாரம் எனவும் கடுமையாக தாக்கினார்.


