News April 24, 2024
IPL: சென்னை அணி பேட்டிங்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் KL ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் CSK அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன. இதில் CSK 4, LSG 5 ஆவது இடங்களில் உள்ளன. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News January 12, 2026
செயலிழந்தவர் போல் விஜய் இருக்கிறாரா? கஸ்தூரி

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் விஜய் மெளனமாகவே இருப்பது பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் வித்திட்டுள்ளது. இந்நிலையில், கரூரில் 41 பேர் இறந்து 4 நாள்களுக்கு பிறகு யோசித்து பேசிய விஜய், அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமலே உள்ளதாக கஸ்தூரி சாடியுள்ளார். விஜய்யை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா, செயலிழந்தவராக பார்ப்பதா என தெரியவில்லை என்றும் அவர் வினவியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News January 12, 2026
அளவோ சிறியது, வலிமையோ பெரியது.. கொஞ்சம் பாருங்க

உயிரினங்களின் உலகம் ஏராளமான அதிசயங்கள் நிறைந்தவை. சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகள் இருந்தாலும், இயற்கையின் படைப்பில் சில சிறிய அளவிலான பூச்சிகள் கூட வாயை பிளக்க வைக்கும் வலிமை கொண்டவையாக உள்ளன. அந்த வகையில் என்னென்ன உயிரினங்கள், நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 12, 2026
ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், ராமதாஸ் தரப்பு திமுகவில் அங்கம் வகிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராமதாஸ் & ஜான் பாண்டியன் (தமமுக) உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இம்மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறுதியாகிறதா திமுக – பாமக கூட்டணி?


