News May 1, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் CSK அணி தோல்வி அடைந்துள்ளது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. பேர்ஸ்டோ (46), ரோசோவ் (43) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

Similar News

News March 12, 2026

+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

image

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 12, 2026

இஸ்ரேலை அழிப்போம்: ஈரான்

image

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் ரஹீம் சஃபாவி, இஸ்ரேலை நிச்சயம் அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார். மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க சாத்தியமில்லை என்றும், இரண்டில் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் மோசமான மற்றும் முட்டாள்தனமான அமெரிக்க அதிபர் என்றும் விமர்சித்தார்.

News March 12, 2026

கரூர் துயர வழக்கில் எனக்கு நோட்டீஸா? செந்தில் பாலாஜி

image

கரூர் வழக்கில் CBI தனக்கு சம்மன் அனுப்​பியது ஆச்சரியமாக உள்​ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இருப்​பினும், அவர்​கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்​கு​வேன் என்ற அவர், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து சிலர் விமர்சிப்பது ஏன் என கேட்டுள்ளார். மேலும், கரூர் சம்பவம் நடந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அனை​வருக்​குமே சம்​மன் அனுப்பியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!