News April 16, 2024
IPL: முதலிடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?

RR – KKR இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் (RR -1, KKR -2) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால், புள்ளி வாரியாக (10 புள்ளிகள்) RR அணி முதலிடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று KKR அணி முதலிடத்தை பிடிக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News October 31, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் நேற்று $3,949 ஆக இருந்த 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று $4,018.9 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியதால், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இன்று நம்மூர் சந்தையிலும் தங்கத்தில் விலை கிடுகிடுவென உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி, 1 கிராம் தங்கம் ₹11,300-க்கு விற்பனையானது.
News October 31, 2025
10th பாஸ் போதும்.. மத்திய அரசில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) வெஹிக்கிள் மெக்கானிக் உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News October 31, 2025
சற்றுநேரத்தில் மொத்த நாடும் திரும்பி பார்க்கும் அறிவிப்பு

தற்போதைய அரசியல் சூழலில், அனைத்து மாநிலங்களும் பிஹார் தேர்தலை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்நிலையில், NDA கூட்டணி, இன்று காலை 9.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இதில், மகளிர், இளைஞர்கள், மாணவர்களை கவரும் வகையிலும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் என தெரிகிறது. தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரவுள்ளதால், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளும் இத்தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


