News April 12, 2024
IPL: பும்ரா புதிய சாதனை

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து விராட் கோலி, டு பிளெசிஸ், லோம்ரோர், சௌரவ் சௌவ்ஹான், வைஷாக் ஆகியோரை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
Similar News
News August 16, 2025
சிறுவயது வறுமை… மனம் திறந்த ஜாக்கி சான்

குழந்தை பருவத்தில், தன் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்ததாக ஜாக்கி சான் மனம் திறந்து பேசியுள்ளார். என்னை 250 டாலருக்கு விற்க என் தந்தை தயாராக இருந்தார். ஆனால், நண்பர்கள் தடுத்ததால் நான் தப்பித்தேன். அதன்பின் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து, சிறு சிறு வேடங்கள் நடித்து, 17 வயதில் ஸ்டண்ட் மேன் ஆனேன் என்றார் ஜாக்கி. இப்போது ஜாக்கி சான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ₹4,900 கோடி!
News August 15, 2025
டிரம்ப் – புடின் சந்திப்பு… என்ன நடக்கும்?

இன்னும் சற்று நேரத்தில் அலாஸ்காவில் டிரம்ப்- புடின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் உக்ரைன் போரை நிறுத்த உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கொண்டு வருவதே இந்த சந்திப்பின் நோக்கம், உக்ரைனுக்காக பேசுவதல்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். புடினோ, போரில் தான் பெற்றுள்ள வெற்றிகளை வைத்து பெரிய அளவில் பேரம் பேசும் முடிவுடன் உள்ளார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
News August 15, 2025
அரசு நிகழ்வில் ராகுல் ஏன் பங்கேற்கவில்லை? பாஜக

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, கார்கே பங்கேற்காததை பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தேசிய நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நிகழ்வில் கலந்து கொள்ளாதது பற்றி இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. முன்னதாக காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ராகுல் பங்கேற்றார்.