News April 28, 2024
IPL: மீண்டும் பர்பிள் கேப்பை பெற்றார் பும்ரா

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருக்கான பர்பிள் கேப்பை, மும்பை வீரர் பும்ரா மீண்டும் பெற்றுள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி ரிஷப் பண்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான தரவரிசையில், பஞ்சாப் வீரர் ஹர்ஷல் பட்டேலை (14) பின்னுக்குத் தள்ளி (எகனாமி சதவிகிதப்படி) முதலிடத்திற்கு முன்னேறினார்.
Similar News
News February 5, 2026
PM மோடி உரை.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ்யசபாவில் PM மோடி உரையின் போது முழக்கமிட்ட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி MP-க்கள் வெளிநடப்பு செய்தனர். குடியரசு தலைவர் உரைக்கு மோடி பதிலளித்து வருகிறார். அப்போது, அவரை எதிர்த்து முழக்கமிட்ட கார்கேவிடம், இருக்கையில் அமர்ந்து முழக்கமிடுமாறு மோடி கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனே பிரதானம் என பாஜக கருதுவதால்தான், 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
News February 5, 2026
சபாநாயகருக்கு பின்னால் மோடி ஒளிகிறார்: பிரியங்கா

3 பெண் MP-க்கள், PM இருக்கைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததால், அவைக்கு வர மோடிக்கு துணிச்சல் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவைக்கு வராமல் சபாநாயகருக்கு பின்னால் <<19058063>>PM மோடி<<>> ஒளிந்துகொள்கிறார், இது என்ன முட்டாள்தனம் என்றும், பாஜக அரசு விவாதம் நடத்தவே விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக சுதா, ஜோதிமணி உள்ளிட்டோர் PM-ஐ முற்றுகையிட இருந்ததாக ஓம்பிர்லா சூசகமாக கூறியிருந்தார்.
News February 5, 2026
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: ஐடி

மறைந்த CM ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை HC-ல் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. ₹13 கோடி வரி பாக்கி செலுத்தக் கூறி ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜன.31 வரை வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ₹9.17 கோடி உள்ளது.


