News April 29, 2025
IPL BREAKING: RR அசத்தல் வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில், 210 என்ற இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டியிருக்கிறது RR அணி. முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அதன்பின், பேட்டிங் செய்த GT அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 101 அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வாலும் கலக்கியதால், வெறும் 15.5 ஓவர்களில் RR வெற்றி பெற்றது.
Similar News
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<
News November 20, 2025
ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்: CM ஸ்டாலின்

கோவைக்கு PM மோடி வந்து சென்ற ஈரம் காய்வதற்குள், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து, மத்திய பாஜக அரசு அடுத்த துரோகத்தை செய்துள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த தனது X பதிவில், கனமழையால் ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் அழுகுரல் ஏன் PM-க்கு கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 20, 2025
நடிகை சோனம் கபூர் மீண்டும் கர்ப்பம் (PHOTOS)

நடிகை சோனம் கபூர் தான் மீண்டும் கர்ப்பமடைந்ததை போட்டோ ஷூட் நடத்தி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். பிங்க் நிற ஆடையில், கூலிங் கிளாஸுடன் கூலாக போஸ் கொடுத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் அகுஜாவை 2018-ல் திருமண செய்த நடிகை சோனம் கபூருக்கு 2022-ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூரை நாமும் வாழ்த்தலாமே!


