News April 8, 2025
IPL BREAKING: RCB அணி த்ரில் வெற்றி

மும்பை அணிக்கு எதிரான த்ரில்லான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா & திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை போராடி மும்பை தோல்வியைத் தழுவியது.
Similar News
News December 21, 2025
பாஜக கண்ணாடி வழியே RSS-ஐ பார்க்க வேண்டாம்: மோகன்

பாஜக எனும் கண்ணாடி வழியே RSS-ஐ பார்க்கும் போக்கு பலருக்கும் உள்ளது; ஆனால் இது தவறான புரிதலை ஏற்படுத்தும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சங்கத்தை புரிந்து கொள்ள விரும்பினால், பிற அமைப்புகளுடன் ஒப்பீடு செய்வது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். மேலும், RSS-ஐ பாஜகவுடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பேசுவதையும் அவர் எதிர்த்துள்ளார்.
News December 21, 2025
₹151 கோடியுடன் இந்தியாவில் முதலிடம் பிடித்த ‘கூலி’

2025-ல் இந்தியாவில் வெளியான படங்களில், அதிக வசூலை ஈட்டிய முதல் 10 படங்களின் மூலம் மட்டும் ₹5,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகில், தமிழ் படமான ‘கூலி’ படமே முதல் நாளில் அதிக வசூலை (₹151 கோடி) ஈட்டியுள்ளது. இந்த பட்டியலில் 2-ம் இடத்தில், தெலுங்கு படமான ‘OG’ (₹145 கோடி), 3-ம் இடத்தில் தெலுங்கு படமான ‘கேம் சேஞ்சர்’ (₹90 கோடி) உள்ளன.
News December 21, 2025
பண மழையில் நனையும் 5 ராசிகள்

2026 பிப்ரவரியில் திரிகிரஹி, லட்சுமி நாராயண யோகங்கள் உருவாக இருப்பதால் 5 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்குமாம். *ரிஷபம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். *மிதுனம்: நிதி நிலைமை மேம்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். *கடகம்: வியாபாரத்தில் டபுள் லாபம். *துலாம்: புதிய முதலீடுகள் செய்ய நல்ல நேரம். சேமிப்பு அதிகரிக்கும். *மகரம்: வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.


