News January 23, 2025

IPL: KKRக்கு பெரிய ஷாக்?

image

ரஞ்சி டிராபி தொடரில் ம.பி அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயருக்கு இன்று காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக நாள்கள் எடுக்கும் என்பதால், ஐபிஎல்லில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் தான் அவரை, KKR அணி ₹23.75 கோடிக்கு வாங்கியது. மேலும், நடப்பு சீசனில் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டது.

Similar News

News November 29, 2025

சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்கும்!

image

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் மக்கள் பணி செய்யும் கட்சி தமாகா என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 4 மாதங்களாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் நிச்சயமாக ஒலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 11 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தமாகா கட்சி குரல் கொடுத்து வருவதாகவும் ஜிகே வாசன் குறிப்பிட்டார்.

News November 29, 2025

சச்சின்-டிராவிட் சாதனை முறியடிக்கப்படுமா?

image

IND vs SA இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித்-கோலி ஜோடி, சச்சின்-டிராவிட் ஜோடி சாதனையை முறியடித்து வரலாறு படைக்க உள்ளனர். இதுவரை, இந்த 2 ஜோடிகளும், 391 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஜோடி என்ற பெருமையை ரோஹித் & கோலி பெறுவார்கள்.

News November 29, 2025

ராசி பலன்கள் (29.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!