News April 25, 2025
IPL: பெங்களூரு அணி த்ரில் வெற்றி

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூரு 205 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி மற்றும் படிக்கல் அரைசதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் துருவ் ஜுரல் அதிரடியாக விளையாடினார். எனினும், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Similar News
News April 25, 2025
டிராகன் பட பாணியில் மோசடி.. கடைசியில் ட்விஸ்ட்!

டிராகன் படத்தில் வருவதுபோல் பெங்களூருவில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்தவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவன ஆன்லைன் இன்டர்வியூவில் நண்பரின் உதவியுடன் பாஸ் ஆன பிரசாந்த்(20), பணிக்கு சேர்ந்தபோது சிக்கிக் கொண்டுள்ளார். அவரது திறன், பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டதால் மாட்டிக் கொண்ட அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரீல் ‘டிராகனுக்கு’ வந்த சோதனை!
News April 25, 2025
பஹல்காம் தீவிரவாதிகளில் 15 வயது சிறுவர்கள்!

கையில் துப்பாக்கிகளுடன் வந்த 2 சிறுவர்களே தங்களது தந்தையை கொன்றதாக, தீவிரவாத தாக்குதலில் பலியான ம.பி.யைச் சேர்ந்த சுஷிலின் மகன் ஆஸ்டன் தெரிவித்துள்ளார். 15 வயதான அந்த சிறுவர்கள், தனது தந்தையிடம் ‘கல்மா’ ஓதச் சொன்னதாகவும், அவர் கிறிஸ்டியன் என சொன்னதும், சுட்டுக் கொன்றதாகவும் ஆஸ்டன் கூறியுள்ளார். மேலும், முஸ்லிமா? என கேட்டுவிட்டே அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.