News March 25, 2024

IPL: பெங்களூரு அணி அபார வெற்றி

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி & தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிகபட்சமாக கோலி 77 & தினேஷ் 28 ரன்கள், குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

Similar News

News November 5, 2025

TVK பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?

image

கரூர் துயரத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோல், மீனவர்கள் கைது, SIR-க்கு எதிராகவும், நெல் கொள்முதல் செய்ததை கண்டித்தும், தொழில் முதலீடு, வேலை வாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் வலியுறுத்தியும், மக்கள் சந்திப்பில் விஜய் மற்றும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

News November 5, 2025

மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்குதா? இதோ Tips

image

➤சார்ஜிங் போர்ட்டில் அழுக்கு படிந்திருக்கிறதா என்பதை சோதிக்கவும் ➤சார்ஜ் செய்வதற்கு முன், போனில் இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களை முழுவதுமாக மூடவும் ➤போனை Switch Off செய்துவிட்டு சார்ஜ் செய்து பாருங்கள் ➤போனுக்காக கொடுக்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். ➤சார்ஜில் இருக்கும்போது போனை பயன்படுத்த வேண்டாம். இது பேட்டரியை பழுதாக்கும். இத்தகவல் பலருக்கு பயனளிக்கும், SHARE THIS.

News November 5, 2025

ஹாக்கி போட்டிக்கான கோப்பையை வெளியிட்டார் CM

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து 14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை நடத்தவுள்ளனர். இந்நிலையில், இப்போட்டிக்கான லோகோவை வெளியிட்ட CM ஸ்டாலின், அதற்கான வெற்றி கோப்பையையும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆடவர் ஹாக்கி போட்டிகள் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை மதுரை, சென்னை என 2 நகரங்களில் நடைபெற உள்​ளன.

error: Content is protected !!