News November 24, 2024
IPL Auction: ₹10 கோடிக்கு ஏலம் போன ஷமி

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ₹10 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாததால் இந்த முறையும் குறைந்த விலைக்கே ஏலம் போயிருப்பதாக தெரிகிறது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News October 26, 2025
சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
News October 26, 2025
சாதியக் கொடுமையை பேசுவது எப்படி தவறு? அமீர்

‘பைசன்’ போன்ற படங்களின் சமூகத்தில் பிரச்னை உண்டு பண்ண நினைக்கிறீங்களா என மாரிசெல்வராஜை பார்த்து கேட்பது அபத்தமானது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி பேசுறது தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க என நிகழ்ச்சி ஒன்றில் அவர் கேட்டுள்ளார்.
News October 26, 2025
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு

தனியார் பல்கலை. திருத்த சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். புதிதாக தனியார் பல்கலைக்கழங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டு என்ற நோக்கத்திற்காக இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் நலன் எந்த வகையில் இதனால் பாதிக்காது எனவும் விளக்கியுள்ளார்.


