News November 24, 2024
IPL Auction: ₹26.75 கோடிக்கு ஐயரை வாங்கிய PBKS

2024ம் ஆண்டு KKR அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் ஏலத்தில் ₹26.75 கோடிக்கு PBKS அணியால் வாங்கப்பட்டுள்ளார். Bidding’ஐ KKR அணி தொடங்கிய நிலையில், அவருக்காக பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியாக அவரை, ₹26.75 கோடிக்கு PBKS அணி வாங்கியது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News September 19, 2025
75 வயதில் விரதமிருக்கும் PM மோடி

செப்.17-ம் தேதி 75-வது பிறந்தநாள் கொண்டாடிய PM மோடி, ஜூன் மத்தியில் தொடங்கிய சாதுர்மாஸ் விரதத்தை கடைபிடித்து வருகிறார். 4 மாதங்கள் நீடிக்கும் இந்த விரத காலத்தில் PM ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு சாப்பிடுவார். 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் PM, உணவு சாப்பிடுவதை தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடிப்பார் என்று கூறப்படுகிறது. அதே போல சைத்ர நவராத்திரி விரதத்தையும் பிரதமர் கடைபிடிக்கிறார்.
News September 19, 2025
ரோபோ சங்கருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர் எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News September 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க