News November 24, 2024
அடேங்கப்பா…IPL’ன் பணக்கார வீரரான ரிஷப் பண்ட்!!

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஏலத்தில் ₹27 கோடிக்கு LSG அணியால் வாங்கப்பட்டார். பண்ட்டிற்காக LSG, RCB, SRH அணிகள் போட்டியிட்டன. அவருக்காக DC அணி RTM பயன்படுத்தி ₹7 கோடியை அதிகரித்த போதிலும், LSG அணி அவரை வாங்கியது. இதன் மூலம், IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையும் பெற்றார் பண்ட். Stay tuned with Way2News for IPL live auction updates….
Similar News
News January 22, 2026
டிஜிட்டல் கைது என மிரட்டி ₹16 லட்சம் கொள்ளை

மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய மோசடி கும்பல், டெல்லி குண்டுவெடிப்பு நடத்தியவர்களுடன் அவருக்கு தொடர் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதியவர் வங்கி கணக்கிற்கு ₹7 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர், அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, அவரிடமிருந்து ₹16 லட்சம் பறித்துள்ளனர்.
News January 22, 2026
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விரைவில் புதிய அம்சம்!

பிரபல கிளவுட் சேவையான Google Photos-ஐ பயன்படுத்தும்போது, பின்னணியில் நிகழும் sync காரணமாக போனில் சார்ஜ் வேகமாக குறைகிறது. இதனை சரிசெய்ய விரைவில் கூகுள் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். போனின் பேட்டரி நிலைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக இயங்கும்.
News January 22, 2026
சாய் பாபா பொன்மொழிகள்

*பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை. *ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள். *நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். *தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.


