News November 24, 2024
IPL Auction: ₹15.75 கோடிக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், நடைபெற்ற ஏலத்தில் ₹15.75 கோடிக்கு GT அணியால் வாங்கப்பட்டுள்ளார். பட்லருகாக கடுமையாக GT, RR, DC, PBKS, LSG அணிகள் போட்டியிட்டன. இறுதியில் அவரை GT அணி வாங்கியது. பட்லர் அதிகபட்சமாக 2021ல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 124 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.


