News March 24, 2025
IPL: ஒரே ஓவரில் 6, 6, 6, 6

டெல்லிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், 75 ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக, 13ஆவது ஓவரில் அவர் 0, 6, 6, 6, 6, 4 என 28 ரன்கள் குவித்தார். ஸ்டப்ஸ் வீசிய இந்த ஓவரில் பந்து நான்கு புறங்களிலும் பறக்க விடப்பட்டது. பின்னர், 15ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் பூரன் க்ளீன் போல்ட் ஆனார். இருப்பினும், அவரது பங்களிப்பு லக்னோ அணியை வலுவான இடத்தில் நிறுத்தியிருக்கிறது.
Similar News
News December 13, 2025
TN-ல் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா? R.S.பாரதி

அதிமுகவினர் திமுகவுக்கு போவார்களா, நடிகர் கட்சிக்கு போவார்களா என்ற குழப்பத்தில் EPS இருப்பதாக R.S.பாரதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக 8 முறை PM மோடி, தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை; அதேபோல், அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், SIR நடவடிக்கையால் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினம் இன்று!

நாட்டின் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில், யாரும் எதிர்பாராத வகையில் 2001 டிச.13-ம் தேதி, LeT, JeM அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சல், விவேகத்தின் காரணமாக இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 9 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டார்.
News December 13, 2025
இன்று இரவு தூங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

இந்த ஆண்டின் மிகப்பெரிய & கண்கவர் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஜெமினிட் விண்கல் பொழிவு (Geminid Meteor Shower) இன்று இரவு நடைபெறுகிறது. இரவு தொடங்கும் இந்த விண்கல் மேஜிக் ஷோ, நாளை (டிச. 14) அதிகாலை 1 மணி- 3 மணிக்குள்(இந்திய நேரப்படி) உச்சம் தொடுமாம். அப்போது, 1 மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் வரை பொழிய வாய்ப்புள்ளது. தமிழகத்திலும் இதை பார்க்கலாம் என்பதால், தூங்கிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!


