News April 17, 2024
IPL: 2ஆவது அதிகபட்ச ரன் சேஸ்

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி வரை போராடி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்வது இது 2ஆவது முறை ஆகும். 2020இல் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 226 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.
Similar News
News April 30, 2025
ஏமாற்றினாரா அஜித்? வைரலாகும் நடிகையின் பதிவு

அஜித்தின் ஆரம்பகால பயணத்தில் நடிகை ஹீராவுடனான காதல் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தவறான தகவலைக் கூறி தனது நற்பெயரை கெடுத்துவிட்டதாகவும் ஜனவரியில் வெளியான ஹீராவின் பதிவு, அஜித் பத்மபூஷன் விருது பெற்ற நாளன்று வைரலானது. ஆனால், இந்தப் பதிவில் அவர் அஜித் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், இதற்கு பின்னால் சதி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
News April 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 30, 2025
பிரதமரை சந்தித்த RSS தலைவர்

எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் டெல்லியில் RSS தலைவர் மோகன் பகவத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். காஷ்மீர் தீவிரவாதம் தொடர்பாக, இன்று அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டமும், பிரதமர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. நாளை அமைச்சரவையை கூட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், மோகன் பகவத் பிரதமருடன் சந்திப்பு நடத்தியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.