News March 29, 2024
IPL: 240 சிக்ஸர்கள்.. புதிய சாதனை

பெங்களூருவில் நடைபெற்றுவரும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது அவர், ஒட்டுமொத்தமாக RCB அணிக்காக அதிக சிக்ஸர்கள் (240) அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் 239, டி வில்லியர்ஸ் 238, மேக்ஸ்வெல் 67, டு பிளெசிஸ் 50 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
Similar News
News January 29, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 595 ▶குறள்: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. ▶பொருள்: தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
News January 29, 2026
அதிமுகவை சீண்டிய ஆதவ் அர்ஜுனா

அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தேர்தலில் TVK – DMK இடையேதான் போட்டி என்ற அவர், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார். விஜய் சொன்னதுபோல் தவெகவினர் திமுகவை மட்டுமே ஃபோகஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதிமுகவை ஊழல் சக்தி என விஜய் விமர்சித்ததற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
News January 29, 2026
மாஞ்சோலை தொழிலாளர்கள் 7 நாள்களில் காலி செய்ய உத்தரவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாம்பே-பர்மா டிரேடிங் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைவதால், அங்கிருந்து தொழிலாளர்களை வெளியேறுமாறு அந்நிறுவனம் கூறியது. இதற்காக நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மக்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கினர். இந்நிலையில் முழுவதுமாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


