News December 16, 2025
IPL 2026 அப்டேட்

IPL 2026 தொடங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது முதல் போட்டி மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் இறுதிப் போட்டி மே 31-ம் தேதி நடைபெறும் என்றும் cricbuzz-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IPL மினி ஏலம் நாளை அபுதாபியில் நடைபெற உள்ளது.
Similar News
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 16, 2025
அதிமுக முக்கிய நிர்வாகி ஜெகநாதன் காலமானார்

அதிமுக அம்மா பேரவை துணை செயலாளரும், நெல்லை மாநகராட்சி EX துணை மேயருமான P.ஜெகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக EX அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஜெகநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
News December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதால் என்ன பயன்? பிரியங்கா

VB-G Ram G மசோதாவுக்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய விவாதத்தில் இதுகுறித்து பேசிய அவர், காந்தி பெயரை மாற்றுவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார். முன்பு, <<18578101>>MGNREGA<<>>-விற்கு 90% மத்திய அரசு நிதி கொடுத்தது. ஆனால், தற்போதைய VB-G Ram G-ன் படி 40% மட்டுமே மத்திய அரசு கொடுக்கும். இது அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சி என்றும் பிரியங்கா விமர்சித்தார்.


