News March 21, 2025
IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
Similar News
News March 29, 2025
நிர்வாண PHOTOS வெளியிட்டது யார்? மெலானியா ஓபன் டாக்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா, ஒரு முன்னாள் மாடலாவார். இந்நிலையில், அவர் மாடலிங் செய்தபோது வெளியான நிர்வாணப் படங்கள், 2016 அதிபர் தேர்தலின் போது, பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை செய்தது யார் என்பது அப்போது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தவே, டிரம்ப்பின் அப்போதைய அரசியல் ஆலோசகரான ரோஜர் ஸ்டோன், அதை வெளியிட்டதாக, மெலானி தற்போது தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
ஜோகோவிச் ஆட்டத்தை கண்டு ரசித்த மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன், டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இந்த ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த மெஸ்ஸி, போட்டிக்கு பின் ஜோகோவிச்சுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது இருவரும் தங்கள் ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர்.
News March 29, 2025
ரூ.6.5 கோடிக்கு ஆப்பு வைத்த டேட்டிங் ஆப்…!

டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பி தொழிலதிபர் ஒருவர் ரூ.6.5 கோடியை இழந்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது. தல்ஜித் சிங் என்பவருக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அனிதா சவுகான் அறிமுகமாகியுள்ளார். ஆன்லைன் ட்ரேடிங் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என அந்த பெண் ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பி அவர் முதலீடு செய்த நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.5 கோடி திருடுபோயுள்ளது. So sad!